பருகல்


பேரன்பு நிகழும் இரவுகளில்
நான்
மெழுகுவர்த்திகளை
மௌனமாக்குகிறேன்

உன் நிர்வாணமோ
ஆடைகளோ
பார்வைகளுக்கானதல்ல

நான் பருகுபவன்
கலப்பவன்
ஸ்பரிசிப்பவன்

இருட்டின் ரகஸ்யங்களுக்குள்
ஒளிந்து கிடக்கும்
வெகு வெளிச்சத்தில்
நான் சற்றுத்தணிந்ததொரு
பெரும்பசிக்காரன்,
உன் ஸ்தனங்களோ
பெருங்கடலின் கதவுகள்

Comments