நாமும் இரவானோம்
கருமையாய்
நட்சத்திரமாய்
தனித்துக் கரையும் பறவையாய்
ராப்பூச்சிகளின் சிலுசிலுப்பாய்
நாமும் இரவானோம்
சன்னல் கண்ணாடிகள் வீசிய வெளிச்சத்தில்
துயிலெழுந்தோம்
மார்முடிகளை
கடித்து இழுத்தபடி சொன்னாய்
'' மிருகம் ''
நகங்களுக்கு அன்பென்ற பெயர்
ருதுவானது
Comments
Post a Comment