பக்கத்து இருக்கையிலிருந்து நெளியும் கொடி


இருள் கவிந்து நகரும் பேருந்தில்
எல்லோருக்கும்
அவன் உறங்கிக கொண்டிருப்பவன்
அல்லது
உறங்கிக் கொண்டிருப்பவனைப் போலிருப்பவன்

கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டி
அருகில் அமர்ந்தவன் விரல்கள்
சபிக்கப்பட்ட கொடியின் நீளங்களாய்
இடுப்போரம் நெளிந்து உறக்கம் கலைத்தது

சன்னமாகத் தொடர்ந்த படரலின் 
ஆதி வாசத்தில்
விரைக்கத் துவங்கியிருந்த என் குறியை
சீராக நெருங்குகிறது
அதிகபட்சம் வருடல்களால் முற்றுப் பெறும்
பனிக்காலமொன்று

கூப்பாடு போடுவானோ என்ற அச்சத்திலும்
மனிதர்கள் நிறைந்த செவ்வகத்திலும்
எப்படி சாத்தியம்
தோல் கத்திகளால் ஒரு யுத்தம்

பசி தீர்க்கத் திராணியற்ற உலகங்களில்
தொடர்ந்து கொண்டெயிருக்கிறது
விரல்களெல்லாம் குறிகளாகிப் புணரும் நிகழ்வு

Comments