மனமரக் கிளைகளெங்கும்
சொல்ல நினைத்தவைகளின்
பூச்செறிவுகள்
கொஞ்சம் கரமுயர்த்து
உதிரட்டும் உன் மேல்
........................................................
எறிந்தது
கல்லோ
பூவோ
சலனம்
சலனம் தான்
..............................
தூரத்தில் நான்
அருகில் நீ
நம்மையன்றி
சமனாகுமோ
இடைவெளிகள்
..............................
உதிர்ந்த பூக்களில்
உறைந்து கிடக்கிறது
உன் கூந்தலிலிருந்து
உதிர்தல் பற்றிய
மென்னயழுகை
..............................
பித்துத் தெளிய
முனியப்பிச்சி
கோவிலில்
சிறகடித்துப்
பார்க்கச் சொல்லும்
அப்பாவுக்கு
எப்படித் தெரியும்
நீ என்னைப்
பிடித்திருப்பது

Comments
Post a Comment