கடல் மொழி


அலையடிக்கிறது...


குரல் நாண்களோடு பிணைந்து கொண்ட வார்த்தைகள்
புலன் கடந்து சயனம் கொள்கிறதாம்
அரூபங்களில்.
ஆனாலும் நில்லாது
கால்களோடே புழங்கிக் கிடக்கிறது
கடலின் வார்த்தைகள்
நேற்றும்
இன்றும்
முன்பொரு காலத்திலிருந்தும்


என்ன சொல்லத் தோற்கிறது பிரபஞ்சம்
காதுகளில்லா கால்களிடம்?
புரிந்து கொண்டிருக்குமா
எந்தக் கால்களேனும்...

Comments