பருந்துகள் வட்டமடிக்கின்றன
புராணிக தர்மச் சக்கர முதுகுகளில்
தண்டுவடமேறி
மோனம் கொள்கிறது
பிளவு நாச்சர்ப்பம்
ஒளி வட்டத்து வெளிச்சத்தில்
கோடானு கோடி பிரபஞ்சங்கள்
புருவ மத்தியில் மிதங்க
சன்ன சப்த்தில் சொல்வான்
துளியென்பது கடலின் துண்டு
கடலில் கலந்து விடு
கடலில் கலந்து விடு
சரீர மதில்களில் கொடும்பசி கொண்டு ஆடும்
நரப்பூனைகள் குடல் நிரப்ப
யசோதரையின் சதைத் துண்டுகளில்லை
அவனைப் போல நமக்கு
கடல்களே எரிந்து தீரும் தீயில்
புல்நுனியென்ன
புத்தனென்ன
போடி...

Comments
Post a Comment