வெளிச்சம்


உன் கண்ணின் உள்மணியில்
நான் தெரியுமளவு
நெருக்கமான முத்தத்தில்
காதலின் இல்லாத பெருங்கதவை
உடைக்கிறேன்
பார்வையின் விசாலங்களில் விளங்காத
கடவுளின் மடியில் கிடந்து
உன் முலைப்பால் குடிக்கிறேன்
அவன் சூசகப் புன்னகையுடன்
சொல்லிப் போனான்
நீ பால் குடிமாறாப் பிள்ளை
கர்த்தனின் தோள் ஆடு

இன்னும் மகிழ்ந்தவளாய்
முலைகளை உதடுகளுக்குச் சரிக்கிறாய்...

Comments