கடைசிப் பேருந்தின் ஏழாவது இருக்கையில்




காட்சிகள் தடுமாறும் பசியோடு
கர்ப்பமும் உள்வாங்கியவளின்
தோள்களில் சாய்ந்து கிடக்குமவன்
நெடுநேரமாய் வீறிடும் குழந்தைக்கு
உயிர்க்குழல் வெளிறிய
பேனாவைக் கொடுக்கிறான்
குழந்தை
மென்னடுக்கம் பரவிய அவன் கைகளில்
தொடர்ந்தும் இல்லாமலும்
வரைந்த கோடுகளில்
நிகழ்ந்தே விடுகிறது
வாழ்வின் திறவாத இமைகளைக் கிழிக்கும்
மொழியற்றதொரு பாடல்

Comments